ஐ.நா.வில் காஷ்மீர் பிரச்சினை: பாகிஸ்தானுக்கு, இந்தியா கடும் கண்டனம்


ஐ.நா.வில் காஷ்மீர் பிரச்சினை: பாகிஸ்தானுக்கு, இந்தியா கடும் கண்டனம்
x

உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பொதுச்சபையின் அவசர கூட்டம் நடந்தது.

புதுடெல்லி,

உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பொதுச்சபையின் அவசர கூட்டம் நடந்தது. இதில் பேசிய பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம், காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி பேசினார். இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தானுக்கு கடும் கண்டனமும் தெரிவித்தது. இந்தியாவின் பதிலளிக்கும் உரிமையை பயன்படுத்தி ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர மிஷன் கவுன்சிலர் பிரதிக் மாத்தூர் இந்த கண்டனத்தை பதிவு செய்தார்.

அவர் கூறுகையில, 'பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து, அவர்களுக்கு பாதுகாப்பான புகலிடங்களை வழங்கும் ஒரு நாடாக பாகிஸ்தான் தன்னையும் அதன் சொந்த செயல்பாடுகளையும் எண்ணிப் பார்க்க வேண்டும்' என சாடினார்.

மேலும் அவர், 'உக்ரைன் விவகாரத்தில் 2 நாட்கள் தீவிர விவாதங்களுக்கு பிறகு, மோதல்கள் மற்றும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு அமைதியின் பாதை மட்டுமே ஒரே தீர்வு என்று அனைவரும் ஒப்புக்கொண்ட நேரத்தில், இதுபோன்ற தேவையற்ற ஆத்திரமூட்டும் செயல் வருந்தத்தக்கதும், நிச்சயமாக தவறானதும் ஆகும்' என்றும் கூறினார்.


Next Story