காஷ்மீர் படுகொலைகள்: மத்திய அரசு மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு


காஷ்மீர் படுகொலைகள்: மத்திய அரசு மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
x

காஷ்மீர் பண்டிட்டுகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.

புதுடெல்லி

காஷ்மீர் பண்டிட்டுகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன. அந்தவகையில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவாலும் மத்திய அரசை சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'காஷ்மீரில் கடந்த 1990-களில் இருந்த நிலை மீண்டும் திரும்புகிறது. காஷ்மீர் பண்டிட்டுகள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர். பா.ஜனதாவால் காஷ்மீரை கையாள முடியாது. அவர்களுக்கு ேகவலமான அரசியல் செய்யவே தெரியும். தயவு செய்து காஷ்மீர் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்' என கேட்டுக்கொண்டார். காஷ்மீரின் தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்ள மத்திய அரசு வைத்திருக்கும் திட்டத்தை மக்களிடம் தெரிவிக்க வேண்டும் எனக்கூறிய கெஜ்ரிவால், காஷ்மீர் பண்டிட்டுகளின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுமாறும் வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கும் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்தார்.


Next Story