தெற்காசியாவின் சிறந்த விமான நிலையமாக பெங்களூரு சர்வதேச விமான நிலையம் தேர்வு!


தெற்காசியாவின் சிறந்த விமான நிலையமாக பெங்களூரு சர்வதேச விமான நிலையம் தேர்வு!
x

தெற்காசியாவின் சிறந்த விமான நிலையமாக பெங்களூரு கேம்பகவுடா சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

உலகின் சிறந்த விமான நிலையங்கள் குறித்த தர வரிசையை ஸ்கைட்ரேக்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு, சிறந்த விமான நிலையங்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்-ல் நடைபெற்றது.

சர்வதேச அளவில் பல்வேறு கூறுகளில் சிறந்து விளங்கும் சர்வதேச விமான நிலையங்களை பட்டியலிட்டுள்ள ஸ்கைட்ரேக்ஸ், இந்தியா மற்றும் தெற்காசியாவின் சிறந்த விமான நிலையமாக பெங்களூருவின் கேம்பகவுடா சர்வதேதச விமான நிலையத்தை தேர்வு செய்து விருது வழங்கியுள்ளது.

விமான நிலைய நுழைவு வாயிலில் நடத்தப்படும் சோதனை, வெளியேறும் இடத்தில் நடத்தப்படும் சோதனை, வாடிக்கையாளர் சேவை, வாடிக்கையாளர்களுக்கான வசதிகள், விமான நிலைய ஷாப்பிங் என பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு தெற்காசியாவின் சிறந்த விமான நிலையமாக தங்கள் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு விமான நிலையம் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

இதில், உலகின் சிறந்த விமான நிலையமாக கத்தார் நாட்டின் ஹமாத் சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த பணியாளர்களைக் கொண்ட விமான நிலையத்திற்கான விருதுக்கு சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அணுகுவதற்கு எளிதான விமான நிலையத்திற்கான விருதுக்கு துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையமும், தூய்மையான விமான நிலையத்திற்கான விருதுக்கு ஜப்பானின் டோக்கியோ விமான நிலையமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


Next Story