கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அமெரிக்கா சென்றார்


கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அமெரிக்கா சென்றார்
x

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் 6 நாள் பயணமாக நேற்று முன்தினம் அமெரிக்காவுக்கு சென்றார்.

நியூயார்க்,

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் 6 நாள் பயணமாக நேற்று முன்தினம் அமெரிக்காவுக்கு சென்றார். நியூயார்க் நகரில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் 'லோகா கேரளா சபா' என்று அழைக்கப்படும் கேரள வம்சாவளியினர் மாநாட்டில் பினராயி விஜயன் பங்கேற்கிறார்.

இதற்காக நேற்று அவர் மனைவி கமலா, நிதி மந்திரி கே.என்.பாலகோபால், சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர் ஆகியோருடன் நியூயார்க் நகருக்கு சென்றார். 13-ந் தேதி வரை நியூயார்க் நகரில் இருக்கும் பினராயி விஜயன் நாளை (ஞாயிறு) நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

அதை தொடர்ந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடும் அவர், பின்னர் கேரள வம்சாவளியினரின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அதன் பின்னர் உலக வங்கியின் தெற்காசிய பிராாந்திய துணை தலைவர் மார்ட்டினை ரைசரை 12-ந் தேதி வாஷிங்டனில் சந்தித்துப் பேசுகிறார். 13-ந் தேதி மேரிலேண்ட் கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு செய்கிறார்.

அதை தொடர்ந்து, அமெரிக்க சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து 14-ந் தேதி கியூபா தலைநகர் ஹவானாவுக்கு பினராயி விஜயன் செல்கிறார். அந்த நாட்டில் 15, 16-ந் தேதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.


Next Story