போதைப்பொருள் விற்ற கேரள டிரைவர் சிக்கினார்


போதைப்பொருள் விற்ற கேரள டிரைவர் சிக்கினார்
x
தினத்தந்தி 25 Dec 2022 12:15 AM IST (Updated: 25 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கேரளா வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பானசவாடி:-

பெங்களூரு பானசவாடி போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில், தனிச்சந்திரா பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக ஒரு வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த சபீர் (வயது 26) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்து வாடகை கார் ஓட்டி வந்தார்.

எளிதில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையில் கேரளாவில் இருந்து போதைப்பொருட்களை வாங்கி வந்து பெங்களூருவில் கல்லூரி மாணவர்கள், வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. கைதான சபீரிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. சபீர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பானசவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story