கடலில் மிதந்த ரூ.28 கோடி மதிப்புள்ள ஆம்பர்கிரீசை போலீசாரிடம் ஒப்படைத்த கேரள மீனவர்கள்
கடலில் மிதந்து கொண்டிருந்த, ஆம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கல வாந்தியை, கேரள மீனவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கோழிக்கோடு,
கேரள மாநிலம் விழிஞ்சம் மீன்பிடி துறைமுகம் அருகே, கடலில் மிதந்து கொண்டிருந்த, ஆம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கல வாந்தியை, கேரள மீனவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
திமிங்கல வாந்தி என்பது, திமிங்கலத்தின் செரிமான உறுப்பில் இருந்து வாய் வழியாக வெளியேறும் திடக்கழிவுப் பொருள் ஆகும். 'கடல் தங்கம்' என அழைக்கப்படும் திமிங்கல வாந்தியை கடத்த, பலர் முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், 28 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல வாந்தியை போலீசாரிடம் ஒப்படைத்த கேரள மீனவர்களுக்கு, பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
Related Tags :
Next Story