ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது; தீர்ப்பில் பெண்ணின் சாதியை சீண்டிய நீதிபதிக்கு எதிர்ப்பு!


ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது; தீர்ப்பில் பெண்ணின் சாதியை சீண்டிய நீதிபதிக்கு எதிர்ப்பு!
x

பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்ஜாமீன் வழங்கிய கேரள நீதிபதிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள எழுத்தாளர் மீதான பாலியல் பலாத்கார வழக்கில், அவர் மீது குற்றம்சாட்டிய பெண், "பாலியல் இச்சையை துாண்டும் விதமாக ஆடை அணிந்து இருந்ததால்", 'சட்டப்பிரிவு 354ஏ குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பொருந்தாது' என தெரிவித்த நீதிபதி, அந்த எழுத்தாளருக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான சிவிக் சந்திரனுக்கு முன்ஜாமீன் வழங்கிய கேரள நீதிபதிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

முன்னதாக, மாற்றுத் திறனாளியான கேரளாவை சேர்ந்த எழுத்தாளர் சிவிக் சந்திரன்(74) என்பவர், 2020ம் ஆண்டு பிப்ரவரியில், கோழிக்கோடு மாவட்டம் கொயிலானி கடற்கரையில் இளம் பெண் எழுத்தாளர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பெண் எழுத்தாளர் போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் அளிக்க கோரி எழுத்தாளர் சிவிக் சந்திரன், கோழிக்கோடு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவுடன் புகார் கொடுத்துள்ள பெண், தன் மடி மீது அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் சிவிக் சந்திரன் இணைத்துள்ளார்.

இந்த வழக்கில் சிவிக் சந்திரனுக்கு ஆகஸ்ட் 12ஆம் தேதி முன் ஜாமீன் வழங்கப்பட்டது.தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முன் ஜாமீன் கோரி மனுதாரர் தாக்கல் செய்த மனு மற்றும் இணைக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கும்போது, புகார் தெரிவித்த பெண் தன் உடல் அங்கங்கள் தெரியும்படி ஆடை அணிந்துள்ளார். அந்த ஆடை, பாலியல் இச்சையை துாண்டும் வகையில் உள்ளது.

இந்நிலையில், 74 வயதான மாற்றுத்திறனாளி நபர், புகார் அளித்த பெண்ணை தன் மடியில் வலுக்கட்டாயமாக அமரவைத்து, பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கூறுவதை நம்ப முடியவில்லை. எனவே, பாலியல் பலாத்கார வழக்குகளுக்கான சட்டப்பிரிவு 354ஏ, குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பொருந்தாது. எனவே, மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான சிவிக் சந்திரனுக்கு முன்ஜாமீன் வழங்கிய கேரள நீதிபதிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதே பெண் தாக்கல் செய்த இன்னொரு வழக்கில், அந்த பெண்ணின் சாதியை தாக்கி நீதிபதி பேசியதாக புகார் எழுந்துள்ளது.

அதே பெண் தாக்கல் செய்த இன்னொரு வழக்கில், கோழிக்கோடு செஷன்ஸ் கோர்ட்டு நீதிபதி எஸ்.கிருஷ்ணகுமார், ஆகஸ்ட் 2ஆம் தேதி சிவிக் சந்திரனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

சாதி அமைப்புக்கு எதிராகப் போராடும் சிவிக் சந்திரன், குற்றம் சாட்டப்பட்டவரின் எஸ்எஸ்எல்சி சான்றிதழ்களில், அதில் ஜாதி பெயரைக் குறிப்பிட மறுத்ததைக் காட்டுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் சீர்திருத்தவாதி மற்றும் சாதி அமைப்புக்கு எதிராக போராடி, சாதியற்ற சமுதாயத்திற்காக எழுதுகிறார்.

அந்த பெண் பட்டியலின சாதியைச் சேர்ந்தவர் என்று தெரிந்தும், அந்த பெண்ணின் உடலைத் தொடுவார் என்பதும் நம்பமுடியாததாக உள்ளது என்று தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்டவரின் வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொள்ளும்போது, குற்றம் சாட்டப்பட்டவரை விட உயரமான பெண்ணின் முதுகில் சந்திரன் முத்தமிட்டதை நம்ப முடியவில்லை என்று நீதிபதி தனது உத்தரவில் கூறினார்.

இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முன்னதாக, சிவிக் சந்திரன் ஏற்கெனவே இரண்டு பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புத்தகக் கண்காட்சியின் போது ஒரு தலித் எழுத்தாளரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என்று குற்றம்சாட்டப்பட்டது.

மேலும், பிப்ரவரி 2020இல் நடந்த புத்தகக் கண்காட்சியின் போது, சிவிக் சந்திரனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக, இளம் எழுத்தாளர் ஒருவரால் அவர் மீது குற்றம்சாட்டி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த இரண்டு வழக்குகளிலும் சந்திரனின் தரப்பு வழக்கறிஞர்கள், அவை பொய்யான குற்றச்சாட்டுகள் என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story