காதலித்த போது நெருக்கமாக இருந்த படங்கள் வெளியானதால் உயிரை மாய்த்த இளம்பெண்: போலீசுக்கு பயந்து முன்னாள் காதலனும் தூக்குப்போட்டு தற்கொலை


காதலித்த போது நெருக்கமாக இருந்த படங்கள் வெளியானதால் உயிரை மாய்த்த இளம்பெண்: போலீசுக்கு பயந்து முன்னாள் காதலனும் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 May 2023 4:15 AM IST (Updated: 5 May 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

அப்போது இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு சென்று காதல் வானில் சிறகடித்து பறந்தனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த கடுத்துருத்தி பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு 22 வயது ஆகிறது. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அருண் வித்யாதர் (வயது 32) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. அப்போது இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு சென்று காதல் வானில் சிறகடித்து பறந்தனர்.

உற்சாகமிகுதியில் இருவரும் நெருக்கமாகவும் இருந்துள்ளனர். அந்த காட்சியை புகைப்படமாகவும் எடுத்துள்ளனர். பின்னர் அருண் வித்யாதரின் நடவடிக்கை சரியில்லாததால் அவருடனான காதலை அந்த பெண் முறித்து கொண்டார்.

இது அருண் வித்யாதருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் காதலியை பழிவாங்க திட்டமிட்டார். இந்தநிலையில் காதலித்த போது அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்த படங்களை அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டார். இதனை பார்த்த அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

மேலும், கடந்த 2-ந் தேதி அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பெண்ணின் பெற்றோர் கடுத்துருத்தி போலீஸ் நிலையத்தில் அருண் வித்யாதருக்கு எதிராக புகார் மனு அளித்தனர். அதில், தங்களது மகளின் தற்கொலைக்கு அருண் வித்யாதர் தான் காரணம் என தெரிவித்தனர். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர். இதனை அறிந்த அருண் வித்யாதர் தலைமறைவானார். இந்தநிலையில் நேற்று போலீசாருக்கு பயந்து காசர்கோடு காஞ்சங்காட்டில் உள்ள ஒரு லாட்ஜில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.


Next Story