இளம்பெண் கடத்தி கற்பழிப்பு


இளம்பெண் கடத்தி கற்பழிப்பு
x

விஜயாப்புரா அருகே இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட 3 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

விஜயாப்புரா:-

இளம்பெண் கற்பழிப்பு

விஜயாப்புரா மாவட்டம் டவுன் அருகே மகளிர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு பஸ் நிலையம் உள்ளது. அந்த பஸ் நிலையத்தில் ஒரு இளம்பெண் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள், இளம்பெண்ணை கேலி மற்றும் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த இளம்பெண், வாலிபர்களுடன் சண்டை போட்டுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் ஆத்திரமடைந்த 3 வாலிபர்களும், இளம்பெண்ணை பஸ் நிலையத்தில் இருந்து கடத்தி சென்றுள்ளனர். பஸ் நிலையம் அருகே உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து இளம்பெண்ணை கற்பழித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இளம்பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டார்கள்.

3 பேருக்கு வலைவீச்சு

இதற்கிடையில், மயக்கம் அடைந்த இளம்பெண் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திலேயே கிடந்துள்ளார். மறுநாள் காலையில் கிராம மக்கள், இளம்பெண் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இளம்பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தகவல் அறிந்ததும் மகளிர் போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது 3 வாலிபர்கள், இளம்பெண்ணை கடத்தி சென்றதாகவும், அவர்களில் ஒருவர் இளம்பெண்ணை கற்பழித்ததும் தெரியவந்தது.

இளம்பெண்ணை வாலிபர்கள் தாக்கியதால், அவர் மயக்கம் அடைந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து விஜயாப்புரா மகளிர் போலீசர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகி விட்ட 3 வாலிபர்களையும் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் விஜயாப்புராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story