2 குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை


2 குழந்தைகளை கொன்று   பெண் தற்கொலை
x

2 குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை செய்துகொண்டார்.

விஜயாப்புரா: விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி தாலுகா கந்தினகோரி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீசைலா குப்பேவாடி. இவரது மனைவி அம்மாவ்வா (வயது 32). இந்த தம்பதிக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். ஸ்ரீசைலா ஆடுகள் மேய்த்து வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல், நேற்று காலையிலும் அவர்களுக்குள் சண்டை உண்டானது.

இதையடுத்து, தனது ஒரு வயது குழந்தை, 3 வயதான லட்சுமி ஆகிய 2 குழந்தைகளையும் தூக்கி கொண்டு அம்மாவ்வா வெளியே சென்றார். பின்னர் கிராமத்தின் அருகே உள்ள கிணற்றுக்குள் தனது குழந்தைகளை வீசி கொன்றுவிட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார். இதுகுறித்து தேவரஹிப்பரகி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story