கொல்கத்தா பயண சுற்றுலா கண்காட்சி; பிரமாண்டமாக அமைக்கப்பட்ட தமிழக அரங்கு


கொல்கத்தா பயண சுற்றுலா கண்காட்சி; பிரமாண்டமாக அமைக்கப்பட்ட தமிழக அரங்கு
x

கொல்கத்தாவில் நடைபெறும் பயண சுற்றுலா கண்காட்சியில் தமிழக அரங்கை சுற்றுலா இயக்குனர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்.

கொல்கத்தா:

கொல்கத்தா மாநிலம் பிஷ்வா பங்களா கண்காட்சி மையத்தில், 2022-ஆம் ஆண்டிற்க்கான பயண சுற்றுலா கண்காட்சி நேற்று தொடங்கியது. இக்கண்காட்சியில் மாலத்தீவு, தாய்லாந்து, தமிழ்நாடு மற்றும் 8-க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாத்துறையினர், 50-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், கண்காட்சியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியில் 170-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக பெரிய அளவில் சிறப்பான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா அரங்கத்தினை தமிழ்நாடு சுற்றுலா இயக்குனர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்.

இந்த அரங்கம் சுமார் 800 சதுரடியில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வரங்கில் பிரமாண்ட எல்.இ.டி. திரையில் தமிழக சுற்றுலாத்தலங்களின் சிறப்புகளை விளக்கும் விதமாக குறும்படங்கள் திரையிடப்பட்டது. இவ்வரங்கத்தினை 2000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பல நாடுகளை சேர்ந்த பங்கேற்பாளர்கள்,கண்காட்சியாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி நாளை வரை நடைபெறுகிறது.


Next Story