குமாரசாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்


குமாரசாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்
x

பிராமணர் குறித்து இழிவான கருத்துக்கு குமாரசாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மந்திரி ஆர்.அசோக் வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு, பிப்.6-

கர்நாடக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷியின் பிராமணர் சாதி குறித்து குமாரசாமி இழிவாக பேசியுள்ளார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். சுதந்திர போராட்டத்தில் பிராமணர்களின் தியாகம் அதிகம். எந்த ஒரு சாதியாக இருந்தாலும், . அதுகுறித்து ஒரு முன்னாள் முதல்-மந்திரி இழிவாக பேசுவது சரியல்ல. வருகிற சட்டசபை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சி தோல்வி அடைவது உறுதி. இதை தெரிந்து தான் குமாரசாமி மிகுந்த ஏமாற்றம் அடைந்து வாய்க்கு வந்தபடி பேசுகிறார். அவர் உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு ஆர்.அசோக் குறிப்பிட்டுள்ளார்.

குமாரசாமிக்கு மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீலும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, "கர்நாடகத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சி 20 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது. அது ஒரு குடும்ப கட்சி. தேர்தலில் தோல்வி உறுதி என்பதால் ஏமாற்றம் அடைந்து அவர் இவ்வாறு பேசுகிறார். அவருக்கு மக்கள் வருகிற தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்" என்றார்.


Next Story