மைனர் பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த தொழிலாளி கைது


மைனர் பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த தொழிலாளி கைது
x

மைனர் பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

மண்டியா: மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கே.ஆர்.எஸ். அணை பகுதியில் வசித்து வருபவர் 17 வயது மைனர் பெண். இந்த பெண் நேற்று முன்தினம் மாலையில் தான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு தொழிலாளி தனது உடைகளை களைந்து அந்த மைனர் பெண்ணிடம் தனது அந்தரங்க பகுதிகளை காண்பித்து உல்லாசத்துக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதை அந்த மைனர் பெண் தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார். பின்னர் அவர் இதுபற்றி தனது தாயுடன் கே.ஆர்.எஸ். அணை போலீசில் புகார் செய்தார். மேலும் வீடியோ ஆதாரத்தையும் சமர்ப்பித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுபற்றி விசாரித்தனர். விசாரணையில் அந்த தொழிலாளி ஹொங்கஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகேஷ்(வயது 55) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை போக்சோவில் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story