தொடர் கனமழை: குடகில் மேலும் ஒரு இடத்தில் நிலச்சரிவு
தொடர் கனமழையால் குடகில் மேலும் ஒரு இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.
குடகு: தொடர் கனமழையால் குடகில் மேலும் ஒரு இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.
தொடர் கனமழை
கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் மாநிலத்தில் பொிய அளவில் மழை ெபய்யாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக மலைநாடு மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கி உள்ளது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குடகு மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் கரிகே, சம்பாஜே உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. ேமலும் காவிரி ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்து ெவள்ளப்ெபருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ஹாரங்கி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் அணையில் இருந்தும் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும் ஒரு இடத்தில் நிலச்சரிவு
தொடர் கனமழை காரணமாக குடகு மாவட்டத்தில் பல பகுதிகள் ெவள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பாகமண்டலாவில் உள்ள திரிவேணி சங்கமம் பகுதியை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் அந்தப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். நாபொக்லு சாலையில் மழை ெவள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னகேரி-விவககேரி சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குடகில் தொடர்ந்து கனமழை ெபய்து வருவதால், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முக்கியமான இடங்களில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
மழை விவரம்
குடகு மாவட்டத்தில் கடந்த 12 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் பின்வருமாறு:-
மாதே கிராமத்தில் 20 சென்டி மீட்டர் மழையும், பாகமண்டலாவில் 13 ெச.மீ., பேராஜே, பெட்டதஹள்ளியில் தலா 11 செ.மீ., கரிகேவில் 9 செ.மீ., மடிகேரியில் 8 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.