2 ஆயிரம் கிலோ கேக்கில் லதா மங்கேஷ்கர் உருவம்


2 ஆயிரம் கிலோ கேக்கில் லதா மங்கேஷ்கர் உருவம்
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு கேக் கண்காட்சியில் கேக்கால் செய்யப்பட்ட பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உருவம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.

பெங்களூரு:-

48-வது கண்காட்சி

பெங்களூரு கன்டீரவா மைதானம் எதிரே உள்ள செயின்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி கேக் கண்காட்சி நடப்பது வழக்கம். அதுபோல கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையொட்டி இந்த ஆண்டு 48-வது கேக் கண்காட்சி கடந்த 16-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த கேக் கண்காட்சியில் வட அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய தேவலாயமான கதீட்ரல் கட்டிடத்தின் மாதிரி கேக்கால் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் மைசூரு தசரா விழாவின் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் கலந்து கொண்ட கோபாலசாமி யானை, எலெக்ட்ரிக் கார்கள், நமது நாட்டின் தேசிய சின்னமான அசோகா தூண், இந்து கடவுள் விஷ்ணு, நீராவி என்ஜின், ஈபிள் டவர், பரதநாட்டியம், கிறிஸ்துமஸ் மரம், பாம்பு மற்றும் கழுகு உள்ளிட்ட 27 வகையான வடிவங்களில் கண்ணை கவரும் வகையில் கேக்கால் உருவாக்கப்பட்டு உள்ளது.

லதா மங்கேஷ்கர்- மெஸ்சி

இந்த நிலையில் கேக் கண்காட்சியில் மறைந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், பனிக்கரடி, அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்சியின் உருவப்படம் கேக்கால் புதிதாக உருவாக்கப்பட்டு பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது. 2 ஆயிரம் கிலோ எடையில் லதா மங்கேஸ்வரின் உருவம் கேக்கால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதுபோல 410 கிலோ எடையில் பனிக்கரடிகள் உருவம் கேக்கால் செய்யப்பட்டு உள்ளது. சமீபத்தில் கால்பந்து போட்டியில் கோப்பை வென்றஅர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சியின் உருவமும் அச்சு அசலாகா வடிவமைக்கப்பட்டுள்ளது. இவைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது

இந்த கேக் கண்காட்சி வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் வருபவர்களுக்கு நுழைவு கட்டணம் ரூ.100 ஆகும். 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது.


Next Story