இந்துக்களை அவமதித்த சதீஸ் ஜார்கிகோளி மீது சட்ட நடவடிக்கை- நளின்குமார் கட்டீல் வலியுறுத்தல்


இந்துக்களை அவமதித்த சதீஸ் ஜார்கிகோளி மீது சட்ட நடவடிக்கை- நளின்குமார் கட்டீல் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

இந்துக்களை அவமதித்த சதீஸ் ஜார்கிகோளி மீது சட்ட நடவடிக்கை என்று நளின்குமார் கட்டீல் வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு: கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக காங்கிரஸ் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி இந்து என்ற சொல் ஆபாசமானது என்று கூறியுள்ளார். இதன் மூலம் காங்கிரசின் இந்து விரோத கொள்கையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்துக்களை இவ்வாறு விமர்சிப்பதை காங்கிரஸ் கட்சி தொடக்கம் முதலே தனது வேலையாக கொண்டுள்ளது. இந்துக்களை அவமதிப்பது, புறக்கணிப்பதை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செய்து வருகிறது. இந்து என்பது இந்திய நாட்டு மக்களின் வாழ்க்கை முறை என்று சுப்ரீம் கோர்ட்டே கூறியுள்ளது. சதீஸ் ஜார்கிகோளி சுப்ரீம் கோர்ட்டை விட பெரிய மனிதரா?. அம்பேத்கர் கூட இந்து நமது வாழ்க்கை முறை என்று பல முறை கூறியுள்ளார். இந்துக்கள் ஒன்றுபட வேண்டும் என்று அவர் கூறினார். அதன் மூலம் நாட்டை பாதுகாக்க முடியும் என்று அவர் கருதினார். இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திய சதீஸ் ஜார்கிகோளி மீது குற்ற வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நளின்குமார் கட்டீல் கூறினார்.


Next Story