ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரமா? ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் போர்க்கொடி


ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரமா? ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் போர்க்கொடி
x
தினத்தந்தி 29 April 2023 4:15 AM IST (Updated: 29 April 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

போர்க்கொடி உயர்த்தி ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் கூட்டாக கடிதம் எழுதி உள்ளனர்.

புதுடெல்லி,

ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு 1954-ம் ஆண்டு இயற்றப்பட்ட சிறப்பு திருமணச்சட்டத்தின்படி சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க உத்தரவிட வேண்டும் என கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவை, அரசியல் சாசன அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் கூட்டாக கடிதம் எழுதி உள்ளனர்.

அதில் அவர்கள், ஒரே பாலினத்தவரின் திருமணத்தை இந்திய சமூகமும், கலாசாரமும் ஏற்காது என தெரிவித்துள்ளனர். இந்த கடிதத்தில் முன்னாள் தலைமை கணக்கு தணிக்கையர் ராஜீவ் மகிரிஷி, முன்னாள் உள்துறைச்செயலாளர் கோயல், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் சாஷங்க், உளவுத்துறை (ரா) முன்னாள் தலைவர் சஞ்சீவ் திரிபாதி, முன்னாள் நீதிபதிகள் எஸ்.என். திங்கரா, லோக்பால் சிங் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.


Next Story