சிறுத்தை தாக்கி விவசாயி காயம்


சிறுத்தை தாக்கி விவசாயி காயம்
x

சிறுத்தை தாக்கி விவசாயி காயம் அடைந்தார்.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் ஒசபேட்டை தாலுகா கொள்ளரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி. விவசாயி. இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது கால்நடைகளை அழைத்து கொண்டு மேய்ச்சலுக்கு சென்றார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று, குமாரசாமி மீது பாய்ந்து தாக்கியது. இதில் குமாரசாமியின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவரது கதறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்கு சிறுத்தை அங்கிருந்து தப்பி சென்றது. அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Next Story