வீட்டின் மாடியில் புகுந்த சிறுத்தை; வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்


வீட்டின் மாடியில் புகுந்த சிறுத்தை;  வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்
x

மணிப்பால் அருகே வீட்டின் மாடியில் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

மங்களூரு: மணிப்பால் அருகே வீட்டின் மாடியில் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

சிறுத்தை அட்டகாசம்

உடுப்பி மாவட்டம் மணிப்பால் தாலுகா இரியடுக்கா அருகே தர்காசு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, புலி, கரடி போன்ற வனவிலங்குகள் இரைதேடி கிராமத்திற்குள் வருவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த கிராமத்திற்குள் சிறுத்தை ஒன்று புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்துள்ளது.

மேலும் தோட்டத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருக்கும் மாடுகளை ெகான்றும் வந்தது. இந்த சிறுத்தை பீதியில் இருந்த மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க கோரிக்கை வைத்தனர்.

மயக்க ஊசி செலுத்தி...

அந்த கோரிக்கையை ஏற்ற வனத்துறை அதிகாரிகள் கிராமத்தின் 3 இடங்களில் சிறுத்தையை பிடிக்க இரும்பு கூண்டு வைத்தனர். இந்த நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை, அந்த கிராமத்தை சோ்ந்த ரத்தன் என்பவரின் வீட்டின் மாடியில் புகுந்தது. ஆனால் அந்த வீட்டில் யாரும் இல்லை என தெரிகிறது. அப்போது அந்த வழியாக சென்ற தொழிலாளி ஒருவர் வீட்டின் மாடியில் சிறுத்தை பதுங்கி இருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தார்.

உடனே அவர் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் ெகாடுத்தார். அந்த தகவல் அறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் கால்நடை மருத்துவர் உதவியுடன் வீட்டு மாடியில் பதுங்கி இருந்த சிறுத்தைக்கு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர். மயக்க ஊசி செலுத்திய சிறிது நேரத்தில் சிறுத்தை மயங்கியது. இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை கூண்டில் அடைத்து அங்கிருந்து கொண்டு சென்றனர்.

வனப்பகுதியில் விடப்பட்டது

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பிடிபட்டது 3 வயது நிரம்பிய ஆண் சிறுத்தையாகும். அந்த சிறுத்தைக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டு இருந்தது. இதனால் தான் சிறுத்தை தப்பித்து செல்லமுடியாமல் மாடியில் பதுங்கி இருந்துள்ளது. கால்நடை மருத்துவர்கள் மூலம் சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை பிடிபட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story