டெல்லி-மீரட் விரைவு சாலையை கடக்க முயன்ற சிறுத்தை வேகமாக வந்த கார் மோதி உயிரிழப்பு
டெல்லி-மீரட் விரைவுச்சாலையை கடக்க முயன்ற சிறுத்தை, வேகமாக வந்த கார் மோதி உயிரிழந்தது.
காசியாபாத்,
உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் டெல்லி-மீரட் விரைவுச் சாலையில் வேகமாக வந்த கார் மோதி சிறுத்தை ஒன்று உயிரிழந்தது.
கல்சீனா கிராமத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்திலேயே சிறுத்தை உயிரிழந்ததாக காவல்துறை துணை ஆணையர் ரவிக்குமார் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
போஜ்பூர் காவல் நிலையத்தில் கார் உரிமையாளர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனத்தின் விவரங்களை அறிய சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சிறுத்தையின் உடல் மூன்று கால்நடை மருத்துவர்களைக் கொண்ட குழுவால் நடத்தப்படும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
உயிரிழந்த ஆண் சிறுத்தைக்கு ஐந்து வயது இருக்கும் என வன அதிகாரி மணீஷ் சிங் தெரிவித்தார்.
Related Tags :
Next Story