3 பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை


3 பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 6 March 2023 12:15 AM IST (Updated: 6 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு கோர்ட்டு வளாக குண்டுவெடிப்பு வழக்கில் 3 பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

பெங்களூரு:-

பயங்காரவாத செயல்கள்

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் முகமது பகத். இவரது தந்தை கேரளாவை சேர்ந்தவர் ஆவார். இவர் தனது தந்தையுடன் இந்தியாவுக்குள் வந்தார். அவர் கேரளாவில் தனது தந்தையுடன் தங்கி இருந்தார். இதற்கிடையே இவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தென்னிந்தியாவில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக முகமது பகத்தை பயங்கரவாத அமைப்பு அனுப்பி வைத்ததும், மைசூரு கோர்ட்டு வளாக குண்டுவெடிப்பு சம்பவத்தில் முகமது பகத்துக்கு தொடர்பு இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து பயங்கரவாதி முகமது பகத் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டு இருந்தபோது அவருக்கு, பெங்களூரு திப்பு நகரை சேர்ந்த சையது அப்துல் ரகுமான் மற்றும் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவை சேர்ந்த அப்சர் பாஷா ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் கர்நாடகத்தில் உள்ள இந்து அமைப்பு தலைவர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி உள்ளனர்.

ஆயுள் தண்டனை

இதற்காக அவர்கள் சிறையில் இருந்து தப்பிக்க முயன்றனர். அப்போது அவர்கள் தப்பிக்க முடியாமல் போலீசில் சிக்கி இருந்தனர். இதற்கிடையே இவர்கள் 3 பேர் மீதான வழக்குகள் பெங்களூரு என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் விசாரணையில் இருந்தன. இந்த நிலையில் அவர்கள் மீதான வழக்குகளில் என்.ஐ.ஏ. சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பு கூறினார்.

அப்போது நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றியது உறுதியாகி உள்ளது. எனவே பாகிஸ்தானை சேர்ந்த முகமது பகத், சையது அப்துல் ரகுமான், அப்சர் பாஷா ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.


Next Story