சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை


சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 23 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சொத்து தகராறில் அண்ணனை கொன்ற வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தார்வார் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

உப்பள்ளி:

கொலை

தார்வார் மாவட்டம் அல்னாவர் தாலுகா பிரபுநகர் ஒன்னாபுரா கிராமத்தை சேர்ந்தவர் கெம்பண்ணா குடதி. விவசாயி. இவரது சகோதரர்கள் ருத்ரப்பா, சங்கரப்பா. இந்த நிலையில் சொத்து பிரச்சினை காரணமாக கெம்பண்ணாவுக்கும், ருத்ரப்பா, சங்கரப்பாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந்தேதி மீண்டும் அவர்களுக்குள் சொத்து பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது, ருத்ரப்பாவும், சங்கரப்பாவும் சேர்ந்து கெம்பண்ணாவை அடித்து கொலை செய்தனர்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து அல்னாவர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரப்பா மற்றும் ருத்ரப்பாவை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் மீது தார்வார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை தார்வார் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அப்போது ருத்ரப்பா, சங்கரப்பா மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story