மைனர்பெண்ைண பலாத்காரம் செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரருக்கு ஆயுள் தண்டணை
மைனர்பெண்ைண பலாத்காரம் செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரருக்கு ஆயுள் தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீா்ப்பு வழங்கி உள்ளது.
மங்களூரு: மைனர்பெண்ைண பலாத்காரம் செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரருக்கு ஆயுள் தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீா்ப்பு வழங்கி உள்ளது.
முகநூல் மூலம் பழக்கம்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு தாலுகா பஜ்பே பகுதியில் உள்ள சித்தார்த்தா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் சாலியான் (வயது 35). இவர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். இவருக்கும், உல்லால் பகுதியை சேர்ந்த மைனர்பெண் ஒருவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந்தேதி முகநூல் (பேஸ்புக்) மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரவீன், மைனர்பெண்ணை காதலிப்பது போல் நடித்து வந்துள்ளார். மேலும் மைனர்பெண்ணின் செல்போன் எண்ணை பெற்றுகொண்டு அவரிடம் ஆபாசமாக பேசி வந்துள்ளார். இதனை தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.
தற்கொலை
மேலும் அவரை தனிமையில் அழைத்து பாலியல் பலாத்காரம் செய்து அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். இந்த நிலையில் பிரவீன், மைனர்பெண்ணிடம் ரூ.1 லட்சம் பணம் தருமாறு மிரட்டியுள்ளார். இல்லையென்றால் தன்னிடம் இருக்கும் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் பயந்த போன மைனர்பெண் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ந்தேதி வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். மேலும் தனது சாவுக்கு பிரவீன் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார். இதுகுறித்து உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் பிரவீனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படு்த்தி சிறையில் அடைத்தனா்.
ஆயுள்தண்டனை
இதையடுத்து பிரவீன் ஜாமீனில் வெளியே வந்தார். இதுதொடர்பான வழக்கு மங்களூருவில் உள்ள மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி மஞ்சுளா தீர்ப்பு வழங்கினாா்.
அதில் பிரவீன் மீது குற்றம் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.