மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 6-ந்தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.
புதுடெல்லி,
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 6-ந்தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி ஆதாரை இணைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் வக்கீல் ரவி, சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த டிசம்பர் 21-ந்தேதி மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து வக்கீல் ரவி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story