டெல்லி மெட்ரோ ரெயில்களில் மதுபாட்டில்களை கொண்டு செல்ல அனுமதி
டெல்லியில் மெட்ரோ ரெயில்களில் மது பாட்டில்களை எடுத்து செல்லலாம் என டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் மெட்ரோ ரெயில்களில் மது பாட்டில்களை எடுத்து செல்லலாம் என டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே சமயம் ஒரு நபர் 2 மது பாட்டில்களை மட்டுமே எடுத்து செல்ல அனுமதிப்படுவார்கள் என்றும், மெட்ரோ வளாகத்தில் மது அருந்துவதற்கான தடை தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், "விமான நிலைய வழித்தடம் தவிர டெல்லி மெட்ரோ ரெயில்களில் மது பாட்டில்களை கொண்டு செல்வதற்கு இதுவரை தடை இருந்தது. மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவின் மதிப்பாய்வுக்கு பிறகு விதிமுறை திருத்தப்பட்டுள்ளது. அதன்படி இனி டெல்லியின் அனைத்து மெட்ரோ ரெயில்களிலும் ஒரு நபர் 2 மது பாட்டில்களை எடுத்து செல்லலாம். அதே சமயம் பயணிகள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். எந்தவொரு பயணியும் குடிபோதையில் அநாகரிகமாக நடந்து கொண்டால், அவர்கள் மீது சட்டவிதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.