சித்தராமையாவின் பிறந்தநாள் விழாவின் போது ரூ.1½ கோடிக்கு மது விற்பனை


சித்தராமையாவின் பிறந்தநாள் விழாவின் போது ரூ.1½ கோடிக்கு மது விற்பனை
x

தாவணகெரேயில் நடந்த சித்தராமையாவின் பிறந்தநாள் விழாவின் போது ரூ.1½ கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவின் 75-வது பிறந்தநாள் விழா கடந்த 3-ந் தேதி தாவணகெரேயில் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் சித்தராமையாவின் பிறந்தநாள் அன்று தாவணகெரேயில் எவ்வளவுக்கு மது விற்பனை நடந்தது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலரான ராஜண்ணா என்பவர் பதில் கேட்டு இருந்தார்.

இதற்கு கர்நாடக மதுபானம் விற்பனை கழகம் அளித்த பதிலில், சித்தராமையாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட 3-ந் தேதி தாவணகெரேயில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 164 மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் ரூ.1 கோடியே 62 லட்சத்து 10 ஆயிரத்து 734 வருமானம் கிடைத்தது. மற்ற நாட்களில் ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். பீர், விஸ்கி, ரம், ஒயின், வோட்கா என அனைத்து ரக மதுபானமும் விற்பனை செய்யப்பட்டது என்று கூறியுள்ளது.


Next Story