தெருநாய்கள் கடித்து குதறி சிறுமி படுகாயம்
தெருநாய்கள் கடித்து குதறி சிறுமி படுகாயம் அடைந்தாள்.
சிக்கமகளூரு:
சிக்கமகளூரு டவுன் ஷரீப்ஹள்ளி பகுதியை சேர்ந்த பல்கிஸ் பானு (வயது7) நேற்று முன்தினம் மாலை அதேபகுதியில் உள்ள கடைக்கு தின்பண்டங்கள் வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தாள். அப்போது அப்பகுதியில் தெருநாய்கள் சுற்றித்திரிந்து கொண்டு இருந்தன. அந்த சமயத்தில் 5 நாய்கள் ஒன்று சேர்ந்து சிறுமியை கடித்து குதறியது. இதில் சிறுமிக்கு கால், கைகளில் படுகாயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஷரீப்ஹள்ளி பகுதியில் இரவு, பகல் நேரங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களை கடித்து வருகிறது.என்று கூறப்படுகிறது எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகரசபைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.