எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி: மக்களவை மாலை 6 மணி வரை ஒத்திவைப்பு


எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி:  மக்களவை மாலை 6 மணி வரை ஒத்திவைப்பு
x

மக்களவை மாலை 6 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கியது.

இந்த இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கியதில் இருந்தே உறுப்பினர்கள் அமளியல் தொடர்ந்து அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டு வருகிறது. ராகுல் காந்தி பேச்சு, அதானி விவகாரம் ஆகிய பிரச்சினைகளை எழுப்பி இரு தரப்பும் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை தொடர்ந்து முடங்கி வருகிறது.

இந்த நிலையில், அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி இன்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன இதனால் மக்களவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. மக்களவை மாலை 6 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.


Next Story