முதல்-மந்திரி பதவியில் அதிக நாட்கள்: பினராயி விஜயன் புதிய சாதனை


முதல்-மந்திரி பதவியில் அதிக நாட்கள்: பினராயி விஜயன் புதிய சாதனை
x
தினத்தந்தி 14 Nov 2022 11:15 PM GMT (Updated: 14 Nov 2022 11:15 PM GMT)

கடந்த 2016-ம் ஆண்டு முதல்-மந்திரி பதவி வகித்து வந்த பினராயி விஜயனுக்கே மீண்டும் முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது ஐக்கிய ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி ஆட்சி செய்து வந்தது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியை கைப்பற்றி காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த 2016-ம் ஆண்டு முதல்-மந்திரி பதவி வகித்து வந்த பினராயி விஜயனுக்கே மீண்டும் முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து அவர் தொடர்ந்து முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். தற்போது, பினராயி விஜயன் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். அதாவது கேரளாவில் அதிக நாட்கள் முதல்-மந்திரியாக பதவி வகித்து வந்தவர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த முன்னாள் முதல்-மந்திரி அச்சுதமேனனின் (2364 நாட்கள்) சாதனையை முறியடித்து, தொடர்ந்து 2365 நாட்களை கடந்து பினராயி விஜயன் பதவியில் நீடித்து வருகிறார்.


Next Story