லாரி டிரைவர் குத்திக் கொலை
லாரி டிரைவர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
பெங்களூரு: மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சிவம் (வயது 24). டிரைவரான இவர், லாரி ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு பெங்களூரு கே.ஆர்.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கொடிகேஹள்ளி ரோட்டில் லாரியை சிவம் நிறுத்தினார். பின்னர் அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று சிவம் சாப்பிட்டு கொண்டு இருந்தார். அந்த ஓட்டலில் சில தொழிலாளர்களும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர். இந்த நிலையில், ஓட்டலில் வைத்து திடீரென்று சிவம் மற்றும் தொழிலாளர்கள் இடையே வாக்குவாதம் உண்டானது.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவமை சரமாரியாக குத்தினார்கள். இதில் பலத்தகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே அங்கிருந்து தொழிலாளர்கள் தப்பி ஓடிவிட்டனர். உயிருக்கு போராடிய சிவமும் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் இறந்து விட்டார். இதுகுறித்து கே.ஆர்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய தொழிலாளிகளை தேடிவருகிறார்கள்.