கேலி செய்தவரை தட்டிகேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை; முகத்தில் 118 தையல்
தாக்குதலால் கடும் அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கும் அப்பெண்ணின் குடும்பத்தினர், போபாலில் இருப்பது தங்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்று கருதுவதாகக் கூறுகிறார்கள்.
thபோபால்:
தன்னை கேலி செய்தவர்களில் ஒருவரின் கன்னத்தில் அறைந்த பெண்ணின் முகத்தில் பிளேடால் தாக்கியதில், அவரது முகத்தில் 118 தையல்கள் போடப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் போப்பால் நகரில் ஜூன் 9ஆம் தேதி, மூன்று வாலிபர்கள் 40 வயது பெண் ஒருவரைன் கேலி, கிண்டல் செய்துள்ளனர். அவர்களில் ஒருவரை அப்பெண் கன்னத்தில் அறைந்ததையடுத்து, அப்பெண்ணின் முகத்தில் அவர்கள் பிளேடால் தாக்கியுள்ளனர். பிளேடால் வெட்டப்பட்ட காயங்களை மருத்துவர்கள் 118 தையல்கள் போட்டு சரி செய்துள்ளனர்.
மூன்று குற்றவாளிகளில் இரண்டு பேர் சிறுவர்கள் என்று கூறப்படுகிறது. மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேர் மீதும் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் கம்சிஹனர் மாவட்ட கலெக்டர், மண்டல ஆணையர் மற்றும் இதர அரசு அதிகாரிகளை தனது இல்லத்தில் நேற்று சந்தித்த சிவ்ராஜ் சிங் இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு எதிரான கடுமையான சட்டங்களின் வழக்குப் பதிவு செய்து, கடும் தண்டனை பெற்றுத் தர வலியுறுத்தினார்.
குற்றத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி பாட்ஷா பெய்க் (38) மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாட்ஷா பெய்க் கும்பலின் தலைவனாக உள்ளார். ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் இவர் மீது ஏற்கனவே 32 வழக்குகள் உள்ளன. அவரது வீடு பொதுப் பணித் துறையினரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணை, முதல் மந்திரி நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்ததோடு, ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவிட்டார். மேலும், அப்பெண்ணின் மூன்று குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் உறுதிமொழி அளித்தார்.
இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கும் அப்பெண்ணின் குடும்பத்தினர், போபாலில் இருப்பது தங்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்று கருதுவதாகக் கூறுகிறார்கள்.