வெளிநாட்டிலிருந்து தங்கம் அனுப்புவதாக மோசடி: ரூ.1 கோடியை ஆன்லைன் மோசடி கும்பலிடம் இழந்த பெண்!


வெளிநாட்டிலிருந்து தங்கம் அனுப்புவதாக மோசடி: ரூ.1 கோடியை ஆன்லைன் மோசடி கும்பலிடம் இழந்த பெண்!
x

தங்கம் மற்றும் பணம் ஆகிய பரிசு அனுப்ப, அவர் அதற்கான சுங்க வரி செலுத்த வேண்டும் என்று மர்ம நபர்கள் கூறினர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.1.12 கோடி மோசடி செய்ததாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை காவல்துறை அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற நீதிமன்றக் கண்காணிப்பாளரான அந்தப் பெண், கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் வசிப்பதாகக் கூறிய ஒரு நபருடன் ஆன்லைன் மூலம் அறிமுகம் ஏற்பட்டது.

அந்த நபர் இந்த பெண்ணை ஏமாற்ற திட்டம்போட்டுள்ளார். அதன்படி அவரும், மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களும் இந்த பெண்ணை போனில் அழைத்து பேச தொடங்கினர். அவரிடம் தங்கம் தருவதாக ஆசை காட்டியுள்ளனர். இதை அந்த பெண் நம்பியுள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து தங்கம் மற்றும் பணம் ஆகிய பரிசு அவருக்கு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அவர் அதற்கான சுங்க வரி செலுத்த வேண்டும் என்றும் மர்ம நபர்கள் கூறினர். அதனால் அவருக்கு அந்த பெண் ரூ.1.12 கோடியை பணப்பரிமாற்றம் மாற்றினார்.

அதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த பெண்ணுடன் பேசுவதை நிறுத்திவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசிடம் கூறினார்.

இதனையடுத்து அந்த மர்ம நபர்கள் மீது மோசடி, குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் சதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அலிபாக் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Next Story