மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு


மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு
x

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,005- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் மேலும் 1,005- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 80 லட்சத்து 60 ஆயிரத்து 737- ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 48 ஆயிரத்து 143- ஆக அதிகரித்துள்ளது. மராட்டியத்தில் நேற்று 1,812- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. ஆனால் உயிரிழப்பு நேற்று ஒன்று மட்டுமே பதிவாகியிருந்த நிலையில் இன்று 4 ஆக உயர்ந்துள்ளது சுகாதாரத்துறை ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய 17 ஆயிரத்து 780- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.


Next Story