சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்திற்கு பிடிவாரண்ட்


சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்திற்கு பிடிவாரண்ட்
x

கிரித் சோமையா மனைவி தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் சஞ்சய் ராவத்திற்கு பிடிவாரண்ட் பிறக்கப்பட்டுள்ளது.

மும்பை,

பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் எம்.பி. கிரித் சோமையா. இவரது மனைவி மேத்தா சோமையா தொண்டு நிறுவனம் மூலம் கழிவறைகள் கட்டுவதாக ரூ.100 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்தநிலையில் சஞ்சய் ராவத் பொய் ஊழல் குற்றச்சாட்டை கூறியதாக அவர் மீது மேத்தா சோமையா மஜ்காவ் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடந்தார். இதுதொடர்பான சஞ்சய் ராவத்தின் பேட்டி, செய்திதாள் கட்டுரைகளையும் அவர் கோர்ட்டில் சமர்பித்தார். இதையடுத்து கோர்ட்டு சஞ்சய் ராவத், மனுதாரரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியதற்கான முகாந்திரம் இருப்பதாக கூறியது.

இந்தநிலையில், இன்று நடந்த விசாரணைக்கு சஞ்சய் ராவத் ஆஜராகவில்லை. இதையடுத்து கோர்ட்டு சஞ்சய் ராவத்திற்கு பிணையில் வரக்கூடிய பிடிவாரண்டை பிறப்பித்தது. மேலும் விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு ஒத்தி வைத்தது. பிடிவாரண்டை ரத்து செய்ய சஞ்சய் ராவத் விசாரணைக்கு நேரில் ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story