மராட்டியம் நாட்டின் வளர்ச்சி எந்திரம் - அமித்ஷாவிடம் கூறிய ஏக்நாத் ஷிண்டே
நாட்டின் வளர்ச்சி எந்திரமாக மராட்டியம் உள்ளது. மராட்டியம் வலுப்பெற்றால் நாடும் வலுப்பெறும் என மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
மும்பை,
'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' பிரச்சாரம் தொடர்பான மெய்நிகர் மாநாட்டில் பேசிய மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே,
நாட்டின் வளர்ச்சி எந்திரமாக மராட்டியம் உள்ளது. மராட்டியம் வலுப்பெற்றால் நாடும் வலுப்பெறும். மராட்டியம் ஊரக வளர்ச்சி துறையில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. 75-வது சுதந்திர தினத்தையொட்டி கோடிக்கணக்கான வீடுகளில் தேசியக் கொடி ஏற்றப்படும்.
'ஹர் கர் திரங்கா' திட்டம், எல்லா இடங்களிலும் உள்ள இந்தியர்களை தங்கள் வீட்டில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு ஊக்கமளிக்கிறது. மராட்டியத்தில் ஆகஸ்ட் 9 முதல் 17 வரை ஸ்வராஜ் மஹோத்சவ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மத்திய கலாச்சார விவகாரங்கள் துறை மந்திரி ஜி கிஷன் ரெட்டியும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story