மராட்டியத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது
தொற்றில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 97.84 சதவிகிதமாகவும் உயிரிழப்பு விகிதம் 1.86 சதவிகிதமாகவும் உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மாநில தலைநகர் மும்பையில் மட்டும் 2,087- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். மராட்டியத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 79 லட்சத்து 35 ஆயிரத்து 749- ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 886- ஆக அதிகரித்துள்ளது.
மராட்டியத்தில் நேற்று 3,883- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. நேற்று 2 பேர் உயிரிழந்து இருந்தனர். மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 23,746- ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,085- ஆக உள்ளது. கொரோனா தொற்றைக் கண்டறிய 41,823- மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தொற்றில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 97.84 சதவிகிதமாகவும் உயிரிழப்பு விகிதம் 1.86 சதவிகிதமாகவும் உள்ளது.