சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்!


சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்!
x

மராட்டிய மாநில எம்.எல்.ஏ நரேந்திர போண்டேகர் தனது பிறந்தநாளை, அதிருப்தி எம்.எல்.எக்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார்.

கவுகாத்தி,

மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணி என கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன.

சிவசேனா தனது கொள்கைகளுக்கு முரணான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்னாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அசாமில் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சிலர் பாஜகவுடன் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏக்களில் 20 பேர் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவுடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், மராட்டிய மாநிலத்தின் பண்டாரா தொகுதி எம்.எல்.ஏ நரேந்திர போண்டேகர் தனது பிறந்தநாளை, அதிருப்தி எம்.எல்.எக்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார்.

அவர் இப்போது தங்கியுள்ள அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ராடிசன் ப்ளூ நட்சத்திர ஓட்டலில், சிவசேனா கட்சியின் முன்னால் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் பிற எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த வீடியோ இப்போது வெளியாகியுள்ளது.


Next Story