உண்மையை பேசுபவர்களை ஆட்சியாளர்கள் எதிரிகளாக நடத்துகின்றனர்: சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்


உண்மையை பேசுபவர்களை ஆட்சியாளர்கள் எதிரிகளாக நடத்துகின்றனர்: சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்
x

டெல்லி ஆட்சியாளர்களுக்கு சீனாவும், பாகிஸ்தானும் எதிரிகள் அல்ல. உண்மையைப் பேசுபவர்கள் எதிரிகளாகக் நடத்தப்படுவது தான் நாட்டின் நிலைமை.

மும்பை,

சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், சிறையில் இருந்து வெளியே வந்ததில் இருந்து பாஜக மற்றும் ஷிண்டே அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.

சிவசேனா மூத்த தலைவரும், எம்பியுமான சஞ்சய் ராவத், பணமோசடி வழக்கில் சிறையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தான்(எஅவம்பர் 9) ஜாமீனில் வெளியே வந்தார். பணமோசடி வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், மராட்டியத்தின் அரசியல் சூழல் மாசுபட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் இதழான 'சாம்னா'வில் எம்.பி. சஞ்சய் ராவத் எழுதியிருப்பதாவது:-

'இங்குள்ள மக்கள் தங்கள் எதிரிகள் உயிருடன் இருப்பதை விரும்பவில்லை. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு இதை மீண்டும் ஒருமுறை உணர்ந்து கொண்டேன். மராட்டியத்தின் அரசியல் சூழல் மாசுபட்டுள்ளது

மாநிலத்தில் வெறுப்பு உணர்வு நிலவுகிறது, எதிரிகள் பிழைப்பதை விரும்பாத நிலையை அரசியல்வாதிகள் தற்போது அடைந்துள்ளனர். இங்கு மக்கள் ஒருவரையொருவர் கொலை செய்வதில் உறுதியாக உள்ளனர்.

ஜனநாயகமும் சுதந்திரமும் இப்போது இல்லை, இப்போது அதன் பெயர் மட்டுமே உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இல்லாத விஷம் அரசியலில் பரவியுள்ளது. இன்றைய டெல்லி ஆட்சியாளர்கள் தங்களுக்கு வேண்டியதை மட்டும் கேட்க விரும்புகிறார்கள், அவ்வாறு கேட்காதவர்கள் எதிரிகளாகக் கருதப்படுகிறார்கள்.

சீனாவும், பாகிஸ்தானும் டெல்லிக்கு எதிரிகள் அல்ல, உண்மையைப் பேசுபவர்கள், நேராக இருப்பவர்கள் எதிரிகளாகக் நடத்தப்படுவதுதான் நாட்டின் நிலைமை. இதுபோன்ற அரசியல் தலைவர்கள் நாட்டின் அந்தஸ்தை குறைக்கும் வகையில் செயல்படுகின்றனர்' என்று ராவத் கூறினார்.


Next Story