டெல்லி: லாரன்ஸ் சாலை அருகே காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து


டெல்லி:  லாரன்ஸ் சாலை அருகே காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
x

டெல்லி லாரன்ஸ் சாலை தொழிற்பேட்டை பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலை ஒன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.

புதுடெல்லி,

டெல்லி லாரன்ஸ் சாலை தொழிற்பேட்டை பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. லாரன்ஸ் சாலை தொழிற்பேட்டை பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.

விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் எந்த வித உயிர்சேதமும் ஏற்படவில்லை.

விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், தீ விபத்து குறித்து மதியம் 12.25 மணியளவில் தகவல் கிடைத்ததும், 27 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

இந்த தீ விபத்தில் எந்த வித உயிர்சேதமும் ஏற்படவில்லை. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என டெல்லி போலீசார் தெரிவித்தனர்.


Next Story