ஜனநாயகத்தில் ஒரு நபரை கடவுளாக்குவது சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் - மோடி குறித்து காங். தலைவர் மறைமுக விமர்சனம்
ஜனநாயகத்தில் ஒரு நபரை கடவுளாக்குவது சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் என்று பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் தலைவர் மறைமுக விமர்சனம் செய்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே தலைமையில் பட்டியலின/பழங்குடியின சமூக மக்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய கார்கே, பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்தார். இது தொடர்பாக கார்கே கூறுகையில், ஜனநாயகத்தில் ஒருநபரை கடவுளாக்குவது சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும். இது மாறவேண்டும். ஜாதி மதம் அடிப்படையில் கர்நாடகாவை பாஜக பிரிக்கிறது.
காலியாக உள்ள 30 லட்சம் அரசுப்பணிகளை பிரதமர் மோடி நிரப்பவில்லை. ஒருவேளை நிரப்பினால் பாஜகவின் விளையாட்டு முடிவுக்கு வந்துவிடும். ஆகையால், ஒப்பந்தம், தினக்கூலி அடிப்படையில் ஆட்களை வேலைக்கு எடுக்கின்றனர்' என்றார்.
Next Story