தேர்வில் முறைகேடு: உடற்கல்வி ஆசிரியர்கள் 3 பேர் கைது


தேர்வில் முறைகேடு:  உடற்கல்வி ஆசிரியர்கள் 3 பேர் கைது
x

தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு: கர்நாடகத்தில் கடந்த 2012-2013, 2014-2015-ம் ஆண்டுகளில் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு தேர்வு நடந்தது. இந்த தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதாகவும், தேர்வில் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றி வருவதாகவும் கடந்த மாதம் (ஆகஸ்டு) 12-ந் தேதி பெங்களூரு விதான சவுதா போலீஸ் நிலையத்தில் கல்வித்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


இதையடுத்து முறைகேடு செய்து ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்ற 9 பேரை விதான சவுதா போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்று உடற்கல்வி ஆசிரியைகளாக பணியாற்றி வந்த தாவணகெரேயை சேர்ந்த யாஸ்மின் அப்சா, சைத்ரா, அசோக் நாயக் ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.


Next Story