'மம்தா கடவுள் போன்றவர்; தவறு செய்ய மாட்டார்' மேற்கு வங்காள மந்திரி பேச்சால் சர்ச்சை


மம்தா கடவுள் போன்றவர்; தவறு செய்ய மாட்டார் மேற்கு வங்காள மந்திரி பேச்சால் சர்ச்சை
x

‘மம்தா கடவுள் போன்றவர் அவர் தவறு செய்ய மாட்டார் என்று மேற்கு வங்காள மந்திரி பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தில் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் கல்வி மந்திரி பார்த்தா சட்டர்ஜி உள்பட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பல மேல்மட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள கார்டகா நகரில் நேற்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் விவசாய மந்திரி சோபன்தேப் சட்டோபாத்தியாய் பேசினார். அப்போது அவர், 'நாங்கள் வழிபடும் கடவுள் போன்றவர் மம்தா பானர்ஜி. கடவுளை பூஜிக்கும் பூசாரிகூட சிலசமயங்களில் திருடராகலாம். ஆனால் கடவுள் தவறு செய்ய மாட்டார். ஏன், நான்கூட திருடராகலாம்.

ஆனால் மம்தா அவ்வாறு ஆக மாட்டார்.' என்று கூறினார். மந்திரி சட்டோபாத்தியாயின் இந்தப் பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.'திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதால் இதுபோல பேசிவருகின்றனர்' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சாரியா கூறியுள்ளார்.


Next Story