மணிப்பூர் கொடூரம்: மேலும் ஒரு குற்றவாளி கைது; முதல் - மந்திரி அறிவிப்பு
ஏற்கனவே இன்று காலை ஒருவர் கைதான நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இம்பால்,
மணிப்பூர் வன்முறை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டே செல்லும் நிலையில், இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மணிப்பூரில் 2 இளம் பெண்களுக்கு கொடூரம் இழைக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி உட்பட இருவர் கைது செய்யப்பட்ட்டுள்ளதாக மணிப்பூர் முதல் - மந்திரி பிரென் சிங் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இன்று காலை ஒருவர் கைதான நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுளார். மணிப்பூர் கொடூரம் தொடர்பாக இதுவரை மொத்தம், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story