மணிப்பூர் நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.
இம்பால்,
மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தின் துபூல் ரெயில் நிலையம் அருகே கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலச்சரிவில் சிக்கி ஏற்கனவே 7 பேர் உயிரிழந்தனர். இதுவரை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிலச்சரிவால் பாறைகள் சரிந்து ஆற்றின் குறுக்கே விழுந்ததால் ஏராளமானோர் புதையுண்டு இருக்கலாம் எனவும் அதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் தெரிகிறது. மணிப்பூர் முதல் மந்திரி என். பிரேன் சிங் பலியானவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ரூ. 5.லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம வழங்கப்படும் என கூறி உள்ளார்.
Related Tags :
Next Story