சாலை பணிக்கான வாகனங்கள் தீவைத்து எரிப்பு ஒடிசாவில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம்
பணிக்கு தேவையான கருவிகள், பொருட்களும் அங்கு போடப்பட்டு உள்ளன.
புல்பானி,
ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் உள்ள சிறுகிராமம் ஜார்கி. சுத்ரா கிராம பஞ்சாயத்தை சேர்ந்த இந்த பகுதி மாவட்ட தலைநகரில் இருந்து 85 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த பகுதியில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் ஆதிக்கம் மிகுந்து காணப்படுகிறது.
ஜார்கி கிராமத்தில் சாலை மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் ஈடுபடும் வாகனங்கள் அங்கே சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. பணிக்கு தேவையான கருவிகள், பொருட்களும் அங்கு போடப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் சாலைப் பணியில் ஈடுபடுத்தப்படும் 2 டிராக்டர்கள், 2 ஜே.சி.பி. எந்திரங்கள் மற்றும் சில கருவிகளை மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் தீவைத்து கொளுத்தினர். கடந்த ஞாயிறு அன்று பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவரை, போலீசாருக்கு தகவல் கொடுப்பவராக நினைத்து பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதும் தெரியவந்துள்ளது.