காதல் திருமணம் செய்த 8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
பெங்களூருவில் காதல் திருமணம் செய்த 8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் அவரது கணவரை கைது செய்துள்ளனர்.
பெங்களூரு: பெங்களூருவில் காதல் திருமணம் செய்த 8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் அவரது கணவரை கைது செய்துள்ளனர்.
காதல் திருமணம்
பெங்களூரு மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிவனபுரா பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ் (வயது 28). இவர் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி இருந்தது. ஆனால் அவர் தனது முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கும் ஆடை தொழிற்சாலையில் வேலை செய்து வந்த சவுந்தர்யா (19) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த ஆண்டு (2021) ஆகஸ்டு மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது சவுந்தர்யா 8 மாத கர்ப்பமாக இருந்தார். சந்தோசுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் திருமணமான நாள் முதலே இரவில் வீட்டிற்கு குடித்துவிட்டு வருவதும், மதுபோதையில் சவுந்தர்யாவிடம் தகராறும் செய்தும் வந்துள்ளார்.
கர்ப்பிணி தற்கொலை
கணவரின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் சவுந்தர்யா மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் சவுந்தர்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சவுந்தர்யாவின் பெற்றோருக்கும், மாதநாயக்கனஹள்ளி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். சவுந்தர்யா தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா என விசாரணை மேற்கொண்டனர். மேலும், சவுந்தர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
கணவர் கைது
இதற்கிடையே சந்தோஷ் திருமணம் முடிந்த நாள் முதல் மது அருந்துவது தொடர்பாக அவருக்கும், சவுந்தர்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
எனவே மதுபோதையில் எங்கள் மகளை சந்தோஷ் கொடுமைப்படுத்தி வந்தார். அவரது தூண்டுதலால் எங்கள் மகள் உயிரிழந்துவிட்டார். எனவே சந்தோஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சவுந்தர்யாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு சந்தோசை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.