கோலார் தங்கவயலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாடு


கோலார் தங்கவயலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாடு
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோலார் தங்கவயலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாடு நடந்தது.

கோலார் தங்கவயல்:

கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையில் உள்ள ஜார்ஜ் மன்னர் அரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தாலுகா மாநாடு நடந்தது. இதில், சி.ஐ.டி.யு. சங்க தலைவர் சீனிவாசன், செயலாளர் ஆனந்த்ராஜ், கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் நாராயணசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் கோலார் தங்க சுரங்கத்ைத அரசு மீண்டும் ஏற்று நடத்த வேண்டும், தங்க சுரங்க தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை ரூ.52 கோடியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும்.

தங்க சுரங்க பகுதியில் வசிக்கும் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். சுரங்க பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Next Story