ஜனாதிபதி தேர்தல்; திரவுபதி முர்முவுக்கு மாயாவதி ஆதரவு
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்முவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளார்.
லக்னோ,
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்முவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்.
பா.ஜனதா, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாகவோ அல்லது எதிர்கட்சிகளுக்கு எதிராகவோ இந்த முடிவை எடுக்கவில்லை. எங்கள் கட்சி மற்றும் இயக்கத்தை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளோம். இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story