கால்நடைகளுக்குக்கான தோல் நோய்களை தடுக்க நடவடிக்கை
கால்நடைத்துறை ஊழியர்கள் கிராமங்கள் தோறும் சென்று கால்நடைகளின் தோல் நோய்களுக்கு தேவையான மருந்து மற்றும் தடுப்பூசிகளை செலுத்தவேண்டும் என்று மாவட்ட பொறுப்பு மந்திரி கோபாலய்யா உத்தரவிட்டுள்ளார்.
மண்டியா:-
கால்நடைகளுக்கு நோய்
மண்டியா மாவட்டநிர்வாகம் சார்பிலான ஆலோசனை கூட்டம் காவேரி மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட பொறுப்பு மந்திரி கோபாலய்யா கூறியதாவது:-
மாடுகளுக்கு தோல்நோய்கள் அதிகரித்து காணப்படுகிறது. அதிக மாடுகள் பாதிக்கப்பட்ட கிராமங்களை அடையாளம் கால்நடைத்துறை ஊழியர்கள் தனி கவனம் செலுத்தவேண்டும். கிராமங்கள் தோறும் கால்நடைத்துறை ஊழியர்கள் சென்று ஆய்வு மேற்கொள்வதுடன், கால்நடைகளுக்கு உரிய மருந்து மற்றும் தடுப்பூசிகளை செலுத்தவேண்டும். இது கால்நடைத்துறை ஊழியர்களின் பொறுப்பு.
மாவட்டத்தில் உள்ள மிம்ஸ் ஆஸ்பத்திரியில் அதிகளவு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகள் உள்ளது. இருப்பினும் நோயாளிகள் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்கின்றனர். எனவே டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் முழு கவனம் செலுத்தவேண்டும். கூடுதல் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யவேண்டும். சிகிச்சை அளிப்பதில் அல்லது மருத்துவ உபகரணங்களில் ஏதேனும் பிரசினை இருந்தால் மாவட்ட நிர்வாகனத்தின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும்.
ஜல் ஜீவன் திட்டம்
அதேபோல மழையால் அதிக சாலைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக, தகவல் கிடைத்துள்ளது. பள்ளங்களை மூடுவதற்கு அரசு சார்பில் மானியம் வழங்கப்படும். இதற்காக தாலுகா வாரியாக ரூ.2 கோடி மானியதாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த பணிகளை 15 நாட்களுக்குள் முடிக்கவேண்டும். சட்டவிரோதமாக ரேஷன் அரிசி விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இந்த செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜல் ஜீவன் குடிநீர் திட்டம் 2024-ம் ஆண்டிற்குள் அமல்படுத்தி முடிக்கவேண்டும். பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.