பெண் கொலையில் மெக்கானிக் கைது


பெண் கொலையில் மெக்கானிக் கைது
x

பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக ரூ.2 லட்சத்தை திருப்பி கேட்டதால் அவரை கத்தியால் குத்தி கொன்றது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக மெக்கானிக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

சாந்திநகர்:-

கத்தியால் குத்தி...

பெங்களூரு சாந்திநகர் நஞ்சப்பா சர்க்கிள் அருகே வசித்து வந்தவர் கவுசர் முபீனா. இவர் அரசு பள்ளி ஆசிரியை ஆவார். இவர் கணவரை பிரிந்து மகளுடன் வசித்து வந்தார். அவரது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறாள். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டில் கவுசர் முபீனா தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டிற்கு வந்த மர்மநபர் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றார்.

இதில் கவுசர் முபீனா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் அசோக்நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கத்தி குத்து நடந்தது தெரிந்தது.

கவுசர் முபீனாவுக்கு

பழக்கமானவராக இருக்கும் என போலீசார் சந்தேகித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் கவுசர் முபீனாவை கொலை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த நதீம் பாஷா என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் நதீம் பாஷா ஆட்டோ டிரைவர் என்பது தெரிந்தது. மேலும் அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு, தற்போது சாந்திநகர் பகுதியில் மெக்கானிக் வேலை செய்து வந்துள்ளார்.

மெக்கானிக் கைது

இதற்கிடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த கவுசர் முபீனாவுக்கும், நதீம் பாஷாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்தை நதீம் பாஷா கடனாக பெற்றுள்ளார். இந்த நிலையில் கவுசர் முபீனாவுக்கு கடந்த 12-ந் தேதி பிறந்ந நாள் ஆகும். அப்போது அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்கு நதீம் பாஷா வந்துள்ளார். அப்போது கொடுத்த கடனை கவுசர் முபீனா கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நதீம் பாஷா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கவுசர் முபீனாவை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்ததும், அங்கிருந்து நதீம் பாஷா தப்பி ஓடி தலைமறைவானது தெரிந்தது.

அவர் கவுசர் முபீனாவை கொன்றுவிட்டு வீட்டில் இருந்து தப்பி ஓடிய காட்சி அந்த பகுதியில் உள்ள கடையில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story